Wednesday, January 13, 2010

பொங்கலோ பொங்கல்!!

இன்னாள் - உலகத் தமிழரின் திருநாள்!
உழவர் பெருமகனின் பொன்னாள்!
அள்ளித் தந்த இயற்கைத் தாய்க்கு
நன்றி செலுத்தும் நன்னாள்!

ஆண்டுமுழுதும் உழைத்துக் களைத்த
காளைகளெல்லாம் - இன்று
களிப்பு மிகுந்த கடவுள்களாகின
தமிழனின் நன்றிசெலுத்தும் பண்பினால்!

மாடாய் உழைக்கும் மனிதர்களும் - மனிதனை
மாடாய் ஆக்கிய மிருகங்களும்
பெருகிவிட்ட இவ்வுலகில்
மாட்டையும் கடவுளாக்கிய
தமிழரின் உயர்பண்பினைப் போற்றிட
ஆனந்த பொங்கலிட்டு கொண்டாடுவோம்!
பொங்கலோ பொங்கல்!!

Monday, November 2, 2009

This kavithai was written during
my job search in Chennai in the year 2000

வேலைதேடி சென்றேன் அடையார்.
அட! யார் அந்தக்கிளி?
ஆலமரக் கிளியோ - எனை
ஆளவந்த மயிலோ என்றே
நான் பார்த்திருக்கையில்
"நல்லவனாய் இருத்தல் போதாது,
வல்லவனாகவும் இருத்தல் வேண்டும்
என்மனதை ஆள" - என
கடைக்கண்ணால் பதில்கூறி
பல்லவனில் பறந்து சென்றாள்
என் அறிவுக்கண் திறந்த பைங்கிளி.... :(

Sunday, February 1, 2009

தீபமும் நெருப்பும்!

திரிமேல் எரியும் தீபமாய் இராதே
இளந்தென்றலும் உன்னை அனைத்து விடும்!

கரிக்குள் எரியும் நெருப்பாய் இரு
கடும்புயலும் உன்னை பிரகாசிக்கச் செய்யும்!

இறையருள்

சிந்திக்க நல்லறிவும் இன்னல் வந்தால்திறம்பட
சந்திக்க நெஞ்சுரமும் உனக்கருள - நீயொ
தினமும் புரியாமொழியில் மந்திரங்கள் பாடினால்
நிந்திக்க மாட்டானோ - தினம்நீ போற்றும்இறைவன்?

மழை தந்த பாடல்

On a fine evening in Dallas(Jan 09) I was enjoying the beauty of the rain from my Balcony.

வான்மழை பொழிகிறது!
பூமியும் குளிர்கிறது!
என்மனம் நனைகிறது!
சாரலில் சிலிர்க்கிறது!
கோபங்கள் தணிகிறது!
அன்புள்ளம் துளிர்க்கிறது!
பாடலை தருகிறது!

கிராமிய வாழ்க்கை - இளையராசாவின் இசையில்

http://www.youtube.com/watch?v=MmL5gfB7fyw&feature=related

Tuesday, November 25, 2008

இயற்கையின் இலக்கணப்பிழை!

வீழ்வதும் அழகே - நீரருவியாய் இருந்தால்! -தலை
தாழ்வதும் அழகே -நெற்கதிராய் இருந்தால்!
தொடர்தோல்விகள் அழகே - அலைகடலாய் இருந்தால்!
தெளிவின்மையும் அழகே - படர்பனியாய் இருந்தால்!
சிதறல்கள் அழகே - விண்மீனாய் இருந்தால்!
கதறலும் அழகே - கார்முகிலாய் இருந்தால்!

அழகின் உருவாய் இருப்பதை எல்லாம்
அழிவின் உருவாய் பார்ப்பது உனதுபிழையோ
அல்லது, மனிதா!
நீயே இயற்கையின் இலக்கணப்பிழையோ?